மலையக ரயில் பாதையில் இந்தல்கசின்ன மற்றும் ஓஹிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 148/6 மைல்கட்டை பகுதியில் இன்று (06) மாலை 4 மணி அளவில், கடும் மழையினால் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயங்கும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் உரிய பாதையை சீரமைக்கும் வரை நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.