கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்திலுள்ள Wolfenschiessen நகரில் அமைந்துள்ள ஒரு குடும்பத்தினர் ஏதோ பலத்த சத்தம் கேட்பதை கவனித்துள்ளானர்.
மறுநாள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு 25 மீற்றர் தொலைவில் பெரிய பாறை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர்.தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம் என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள மலையிலிருந்து ஒரு பெரிய பாறை பெயர்ந்து உருண்டு வந்துள்ளது. ஆனால், உருண்டுவந்த அந்த பாறை, எப்படியோ, அந்த வீட்டிற்கு சற்று தொலைவிலேயே நின்றுவிட்டிருக்கிறது.
அந்த பாறை அந்த வீட்டின்மேல் மோதியிருக்குமானால், அது வந்த வேகத்திற்கு அந்த வீடு முற்றிலும் சேதமாகியிருக்கக் கூடும்.