ஹரியானா மாநிலத்தில் உள்ள கூர்கான் மாவட்டத்தில் தான் இந்த பட்டோடி பேலஸ் அமைந்துள்ளது. இந்த அரண்மனை வீட்டை நவாப் மன்னர் இஃப்திகார் அலி கான் தன்னுடைய மனைவிக்காக கட்டினார்.
மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த வீடு, ஒரு கட்டத்தில் ஓட்டலாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி ஆடம்பர திருமணங்கள் நடத்துவதற்காக வாடகைக்கும் விடப்பட்டது.கடந்த 2005 முதல் 2014 வரை நீம்ரானா ஹோட்டலாக இது இருந்தது.
மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த வீடு, ஒரு கட்டத்தில் ஓட்டலாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி ஆடம்பர திருமணங்கள் நடத்துவதற்காக வாடகைக்கும் விடப்பட்டது. கடந்த 2005 முதல் 2014 வரை நீம்ரானா ஹோட்டலாக இது இருந்தது.
பிரம்மாண்ட வீட்டை எப்படியாவது வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், இதற்காக சினிமாவில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்க தொடங்கினார்.
ரூ.800 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை தான் ஆசைப்பட்டபடியே வாங்கினார் சையிப். இந்த வீடு நவாபி மன்னர் காலத்து கட்டிடக் கலையுடன் கட்டப்பட்டு இருப்பதோடு, இன்றளவும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
இந்த வீடு மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 7 டிரெஸ்ஸிங் ரூம், 7 பெட் ரூம், 7 பில்லியர்ட் ரூம் உள்பட மொத்தம் 150 அறைகள் உள்ளன.
இந்த வீட்டில் பழங்காலத்து ஓவியங்கள், புகைப்படங்கள், மர சாமான்கள், கண்ணாடி பொருட்கள் என பல்வேறு விதமான பொருட்கள் நிரம்பி உள்ளன. இந்த வீட்டின் தரை பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் செஸ் போர்டு போன்று கட்டப்பட்டு இருக்கின்றன.
சையிப் அலிகானுக்கு சொந்தமான இந்த வீட்டில் சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படுகின்றன. அண்மையில் திரைக்கு வந்த ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படமும் இந்த வீட்டில் தான் படமாக்கப்பட்டது.
இந்த வீட்டில் பிரம்மாண்ட நீச்சல் குளமும் அமைந்திருக்கிறது. பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.800 கோடியாம். தற்போது பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் ஸ்பாட் ஆக இந்த பட்டோடி பேலஸ் மாறி இருக்கிறது.