பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச் செல்லும் போது,நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை கண்டாலும், அங்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த வளப்பற்றாக்குறைக்கு மாற்றாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும் நிதியை முறையாக செலவிட்டு, பாடசாலை கிரிக்கெட்டை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்குள் பிரவேசிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (05) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று 225 உறுப்பினர்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கிரிக்கெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பெறுமதியான வளங்களை நாட்டில் பாடசாலை கிரிக்கட் தொடக்கம் அனைத்து கிரிக்கெட் வாய்ப்புகளையும் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்துமாறும்,
இந்த பணம் ICC க்கு சொந்தமாக பணம் இல்லை என்றும், இந்த பணத்தை பாடசாலை கிரிக்கட்டை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தினால் 96 ஆம் ஆண்டு போன்று உலகக்கிண்ண வெற்றிக் கனவுக்கு செல்ல முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.