சென்னை வெள்ள பாதிப்பின்போது நடிகர்கள் ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு அஜித் உதவி செய்துள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. உடல் எடையை குறைத்துள்ள அஜித்தின்புதிய தோற்றத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் நடிகர் அஜித் குமார் விஷ்ணு விஷாலை தனது நண்பர்கள் மூலமாக தொடர்பு கொண்டு, விஷ்ணு விஷால் மற்றும் ஆமிர்கானின் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.
தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக ஆமிர் கான் கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கியுள்ளார்.லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடித்த பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வரும் நிலையில் ஆமீர்கான் அதற்காக சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.