சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பல்வேறு பயணிகள் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த மூன்றாம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
தற்போது, வெள்ளம் வடிந்து இயல்பு நிலை மெல்ல திரும்பி வருவதால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சென்னையில் மின்சார ரயில்கள் சேவை தொடங்கியுள்ளது. இதனால், பணிக்கு சென்றவர்கள் சிரமம் இன்றி வீடு திரும்பி வருகின்றன.