மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வெள்ளம் பல இடங்களில் சூழந்து மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீடுகள், கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து போலீசார் மற்றும் மீட்புக் படையினர் க்களுக்கு தேவையான உதவிகள் பணிகளை செய்து வருகின்றனர்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டில் மழை நீர் புகுந்துவிட்டதாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்து உள்ளேன். மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை. செல்போன் சிக்னல் இல்லை. எதுவுமே இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருக்கும் பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் வாழும் மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது.” என்றார்.