மத்திய மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மத்திய மலைநாட்டில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை காரணமாக மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் நேற்று முன்தினம் (02) இரவு முதல் பெய்து வரும் அடை மழையின் காரணமாக, மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ நீர் தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளது.
தேசிய நீர் மின்சார அமைப்புக்கு உரித்தான 93800 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு கொண்ட மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (04) காலை 08.00 மணியளவில் நிரம்பி அதன் கொள்ளளவை மட்டத்தை எட்டுவதற்கு சுமார் 05 அங்குலமாக உள்ளதாக நீர் தேக்கத்திற்க்கு பொறுப்பான லக்க்ஷபான நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டம் கடந்த வாரமும் அதிகரித்து நிரம்பி வழிந்து நிரப்பி உள்ள நிலையில்,
அது மீண்டும் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லக்க்ஷபான, நியூ லக்க்ஷபான, விமலசுரேந்திர, கென்யோன், பொல்பிட்டிய மற்றும் ப்ரோட் லேண்ட் மின் உற்பத்தி நிலையங்களுக்கு முக்கியமாக மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர் தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது இந்த மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா
தினகரன் விசேட நிருபர்-செ.தி.பெருமாள்