ஃ
உலகின் முதன்மை செல்வந்தர் பில் கேட்ஸுக்கும் ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.துபாய் எக்ஸ்போ சிட்டியில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இடம்பெற்றது. இதன் போதே ரணிலுக்கும் பில் கேட்ஸுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம் பெற்றது.விவசாயத்தை நவீனமயமாக்குதல் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன். சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.