நாட்டில் மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் ஆகும
நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் ஆபரணங்களை அடகு வைப்பது, மின்கட்டணத்தை செலுத்த கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடுகிறது.
இந்நிலையில், உரிய நேரத்தில் மின்கட்டணத்தைச் செலுத்தாததால், எதிர்காலத்தில் மின்வெட்டு அதிகரிக்கலாம் என்றும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீட்டெடுக்கும் நேரமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.
மின் கட்டணம் செலுத்தாததால் நாடு முழுவதும் சுமார் 12 இலட்சம் வீடுகளுக்கு சிவப்பு கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.