தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
22 வயதே ஆகும் நிலையில் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர் இந்த ஒருநாள் தொடரில் ஆடினால் அதுவே அவரது சர்வதேச அறிமுகமாகவும் இருக்கும்.
சாய் சுதர்ஷனுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்குவார் என கூறப்படுகிறது. அத்துடன் இந்தியா ஏ அணியிலும் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார்.
அடுத்து டி20 உலகக்கோப்பை வர உள்ள நிலையில் அந்த அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என சில ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனால், சாய் சுதர்ஷனுக்கு இதுவே முதல் இந்திய அணி அழைப்பு என்பதால் அவர் சர்வதேச போட்டியில் என்ன செய்வார் என்பதை பார்க்கவே அவருக்கு இந்த முதற்கட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.