மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தனிகலை மிருக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
புரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் மீட்ட 4 அடி உயரம் 6 அடி நீட்ட்டம் கொண்ட சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை தேயிலை செடிகளின் கீழ் கட்டப்பட்ட கம்பி வலையில் சிக்கி இறந்த நிலையில் மீட்டு எடுத்த சிறுத்தையின் உடலம் ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்நிலை படுத்தபட்டதாக நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இறந்த நிலையில் மீட்டு எடுத்த சிறுத்தையின் உடலம் நீதவான் பணிப்புரையின் படி ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க பட உள்ளது என கூறினார்.
சிறுத்தையின் உடலம் ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு நல்லதண்ணி வன துறையினர் கொண்டு சென்றுள்ளனர்.
தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள் (மஸ்கெலியா)