நடிகரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் மோசமடைந்துள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் ,கடந்த 18 ஆம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.