கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருந்தார் ஜெயம் ரவி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து தற்போது அபிஸியலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருத்திகா உதயநிதி நடிப்பில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
காதலிக்க நேரமில்லை படத்திலும் ஏஆர் ரஹ்மானுடன் இணைகிறார் ஜெயம் ரவி. அதேபோல், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறாராம். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் பெஸ்ட்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்திருந்தார் நித்யா மேனன் . இப்போது ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியாகிவிட்டார்.
தற்போது வெளியான காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஜெயம் ரவியும் நித்யா மேனனும் செம்ம ரொமாண்டிக்கலாக போஸ் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு, லால், வினய், ஜான் கொக்கேன் ஆகியோரும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி, இந்த முறை மெகா டீமுடன் களமிறங்கியுள்ளார்.