டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் பாரிய மரங்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளது.
இது குறித்து பல வருடங்களாக நிலவும் பாதுகாப்பற்ற நிலை மற்றும் உயிருக்கு ஆபத்து தொடர்பில், பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் பல தடவைகள் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோர்வூட் பிரதேச சபையின் அதிகார வரம்பில், உள்ள இந்த அனைத்து மரங்கள் மற்றும் மூங்கில்களை அப் பகுதியில் இருந்து வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த வீதி ஓரங்களில் மழை மற்றும் கோடை காலத்தில் நிற்பதற்கு நிழற்குடைகள் அமைத்து கொடுக்க நோர்வூட் பிரதேச சபை, நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் ஹட்டன் நகர சபை முன் வர வேண்டும்.
இந்த நெடுஞ்சாலை வழியாக ஹட்டனில் இருந்து, பொகவந்தலாவ, மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை,பலாங்கொடைக்கு பயணிகள் ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள், கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு வரும் பல்வேறு தரப்பினரும், பிரதேச மக்களும், வைத்தியசாலைக்கு வரும் மக்களும் இந்த பாரிய அளவில் உள்ள மரங்கள் மற்றும் மூங்கில்களை கிளைகளை வெட்டி அகற்றவோ அல்லது மரங்களை அகற்றி அந்த இடத்தில் தரித்து நிற்கும் மக்களின் உயிர் பாதுகாக்க பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்