ஹீமீகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் – டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆன்ஸிடன்ட் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
பசலைக் கீரை இதில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
பருப்பு வகைகள் : இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த பழம். எனவே இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
டேட்ஸ் என்று அழைக்கப்படும் பேரிச்சையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது. ஏனெனில் இதில் இரும்பு சத்து கொட்டிக்கிடப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
புரக்கோலி இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்பு சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது.