மத்திய மலைநாட்டில் நேற்று மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வெளியேற்றம் செய்யபட்டது.
காசல்ரீ நீர் தேக்கத்தின் மூலம் நீர் மின் உற்பத்தி செய்யும் முகமாக நோட்டன் பகுதியில் உள்ள விமலசுரேந்திர மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்த பின்னர் வெளியேற்றம் செய்யும் நீர் மற்றும் ஒஸ்போன் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகள் மூலம் பெறப்படும் நீர் விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டும் உயர்ந்ததால் தானாகவே நீர் வெளியேறும் அதற்கு அமைய தொடர்ந்து நீர் வெளியேற்றம் செய்ய பட்டு உள்ளது
.
மேலும் இப் பகுதியில் கனத்த மழை காரணமாக கென்யோன் நீர் மின் நிலைய அனையில் மவுஸ்சாக்கலை ஓயா பகுதியில் கன மழையாலும், மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மூலம் மின் உற்பத்தி செய்த பின்னர் நீரை வெளியேற்றம் செய்ய கென்யோன் நீர் மின் நிலைய அனையில் இருந்து நீரை வெளியேற்றம் செய்யபட்டு வருகிறது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்