கடந்த 26 ம் திகதி பௌர்ணமி நாளில் அதிக அளவில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வருகை.
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 2000 க்கு மேற்பட்டவர்கள் கடந்த 26 ம் திகதி பௌர்ணமி நாளில் வருகை தந்ததாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவ்வாறு வந்த யாத்திரிகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 25 ம் திகதி இரவு வேளையில் மலை உச்சிக்கு சென்று மறு நாள் காலையில் சூரிய உதயம் பார்த்து விட்டு அங்கு உள்ள சிவனின் பாதத்தை வணங்கி விட்டு திரும்பி சென்று உள்ளனர்.
அவ்வாறு வந்த யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் பல இடங்களில் தாங்கள் கொண்டு வந்த உணவு பொதிகளை உண்ட பின், எஞ்சிய வற்றை பல்வேறு இடங்களில் போட்டு சென்றதால் அந்த உணவுகளை காட்டு பன்றிகள் சாப்பிட, கூட்டம் கூட்டமாக நல்லதண்ணி நகரில் நடமாட்டத்தை காண கூடியதாக இருந்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும், பயனிகள் மிக மிக பீதியில் நடமாட வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இப் பகுதியில் நடமாடும் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்
மஸ்கெலியா “தினகரன்” விசேட நிருபர்.செ.தி.பெருமாள்(28.11.2023)