இன்று கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற இ.போ.ச ஹட்டன் டிப்போக்கு உரித்தான பஸ் கடுவலைக்கு அன்மித்த பகுதியில் பழுதடைந்ததால் ஹட்டன் நோக்கி செல்லும் பயணிகள் பல மணித்தியாலம் பாதையில் இறங்கி நிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள்.அவசர நிலையில் வைத்தியசாலை செல்லும் நோயாளிகள், அத்தியாவசிய அரச, தனியார் நிறுவனங்களுக்கு செல்வோர், என பலர் பலமணி நேரம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இப் பயணிகளுக்கு மாற்று பேருந்து வசதிகளை செய்து கொடுக்க நடத்துனர் முன்வரவில்லை என பயணிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் டிப்போ அதிகாரிகளே பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நடத்துனர், சாரதிகள் பற்றி கூடிய கவணம் செலுத்துமாறு பயனிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நன்றி: மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் செ.தி.பெருமாள்