பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா.
தளபதி 68 படத்திற்கு இசையமைக்கும் யுவன்: படங்களில் இசையமைப்பது மட்டுமில்லாமல் இசைக்கச்சேரிகள் மூலமாகவும் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் யுவன். பல ஆண்டுகளை கடந்து சமீபத்தில் இவரது இசைக் கச்சேரி சென்னையில் நடைபெற்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, தற்போது விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் தளபதி 68 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் இசைக்காக விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் யுவன் ரசிகர்களும் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தற்போது குடும்பத்துடன் துபாயில் குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கேயே அதி நவீன் ஒலிப்பதிவு கூடத்தையும் அவர் அமைத்துள்ளதாகவும் அங்கு பாடல் பதிவு, பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த படங்களுக்காக தன்னை சந்திக்க கேட்பவர்களையும் துபாயில் வரவழைத்து அவர் சந்தித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.