எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி, பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வுஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிமேஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்வரும் 04 ஆம் திகதி பாதணி விநியோகம் ஆரம்பித்து 27 ஆம் திகதி நிறைவடையுமென அவர் குறிப்பிட்டார்.
மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 740,000 மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.