19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிக்கான இலங்கை அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிநேத் ஜயவாதன தலைமையிலான இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இடம் பிடித்துள்ளார்.
கொழும்பு – கொட்டாஞ்சேனை , st ஜோசப் கல்லூரி மாணவனான சாருஜன் சண்முகநாதன் பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடர்களில் வெளிப்படுத்திய ஆற்றல் செயல்பாடுகள் காரணமாக 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.