நோட்டன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 2022/2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று , பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டு கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் கார்பெக்ஸ் கல்லூரியில் நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது.
வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியாலாளர் ராமின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போராசிரியர் விஜயச்சந்திரன் , மகபேற்று,பெண்கள் நோயியல் வைத்திய நிபுணர் வ.வசந்தராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆ.ராஜாராம், அட்டன் கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் சிவகுமார், கொத்மலை கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி இங்கர்சால்,கண்டி கல்வி வலயம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரமேஸ்பாபு, கம்பளை கல்வி வலயம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உமேஸ்நாதன் ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் உட்பட அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் வாசகர் வட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நோட்டன், காசல்ரி பிரதேச த்த்தை சேர்ந்த பல்கலைக்கழகம் தெரிவான 10 மாணவர்கள் உட்பட உயர்தரத்தில் சித்தி பெற்ற 31 மாணவர்கள் ,புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 11 மாணவர்களும் பதக்கம் அணிவித்து சான்றிதழ்,அப்பியாசகொப்பிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பித்த ஆசிரியர்கள் ,அதிபர்கள் பொற்றோர்களினால் கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.