1டிசம்பர் 9 ஆம் திகதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், அல்லது விடுவித்துக் கொள்ளலாம்.
8 வீரர்களை விடுவித்ததன் மூலம் புதிய வீரர்களை அணிக்கு எடுப்பதற்கான சென்னை சூப்பர் கிங்ஸின் கையிருப்பு தொகை ரூ. 32.2 கோடியாக உள்ளது.
சென்னை அணிக்காக விளையாடி வந்த அம்பதி ராயுடு தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதேபோன்று 2024 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 போட்டிக்கு தயாராகுவதற்காக ஐபிஎல் தொடரை தவிர்ப்பதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்ததை தொடர்ந்து அவரும் அணியில் இருந்து விலகியுள்ளார்.பிரிட்டோரியஸ், சேனாபதி, பகத்வர்மா, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா ஆகியோருடன் மொத்தம் 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் விடுவித்துள்ளது.
8 வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸின் கையிருப்பு தொகை ரூ. 32.2 கோடியாக உயர்ந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் முக்கிய ஆட்டக்காரர்களை சென்னை அணி எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.