இன்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தெஹிவளை களுபோவில பாத்தியா மாவத்தையில் அமைந்திருக்கும் ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் அன்னதானமும் இடம்பெற்றது.
இவ்வாலயம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அடியார்களின் தரிசனத்துக்காக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
அதேநேரம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் அன்னதானமும் இடம்பெறும்.
வெள்ளவத்தை விஹார லேன் வழியாகவும் , களுபோவில சரணங்கரா வீதி வழியாகவும் ,பக்தர்கள் பாத்தியா மாவத்தையில் அமைந்திருக்கும் ஷீர்டி சாய்பாபா ஆலயத்திற்கு வருகை தரலாம்.