அகிலத்திரு நாயகிக்கு பாராட்டு விழா!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகி 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் அகிலத்திருநாயகி கௌரவிக்கப்பட்டார்

குறித்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *