அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை – கோட்டை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் திருத்தப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.