13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்று போட்டியில் பிரிவு II இல், கொழும்பு இந்து கல்லூரி அணியும் , M .D .H ஜெயாவார்த்தேனா மகா வித்யாலயமும் மோதியயது.
இந்து கல்லூரி அணியின் செல்வசேகரன் ரிஷியுதன் , சிறப்பாக 9.4 ஓவர்கள் பந்து வீசி , 9 மெய்டன்கள், ஓட்டங்கள் எதனையும் கொடுக்காது 8 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்து கல்ல்லூரி அணி 126 /9 என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தி கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
M .D .H ஜெயாவார்த்தேனா மகா வித்யாலயம் 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது.
கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் வெற்றியைப் பெற்றது.
மாஸ்டர் செல்வசேகரன் ரிஷியுதனுக்கு மகத்தான வாழ்த்துக்கள்!