சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
“கங்குவா உலகளவில் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஜமேக்ஸ், 3டி முறையிலும் இதை வெளியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியான பாதையில் போனால் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய கதவுகள் திறக்கும்” என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.