சீனா சமீபத்தில் “உலகின் அதிவேக இண்டர்நெட் சேவையை” அறிமுகப்படுத்தியது, இது தற்போதுள்ள முக்கிய இணைய சேவை வழித்தடங்களை காட்டிலும் 10 மடங்கு வேகமானது.
இது தான் டெக் உலகின் அடுத்த பெரிய அற்புதமாக பார்க்கப்படுகிறது, இதை அனைத்து துறையும், சாமானிய மக்களும் பயன்படுத்தும் அளவுக்கு மாறினால் டிஜிட்டல் மற்றும் இணைய சேவையில் பெரும் மாற்றத்தை அடைய முடியும்.
சீனா உருவாக்கியுள்ள இப்புதிய நெட்வொர்க் மூலம் அந்நாட்டின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைகளில் அமைந்துள்ள நகரங்களுக்கு இடையே ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் அதாவது 1,200 ஜிபி டேட்டா அனுப்ப முடியும் என சீனா காட்டியுள்ளது.
சீனா இந்த சோதனையை பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சூ ஆகிய பகுதிகள் மத்தியில் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த 3 முக்கிய சீனா நகரங்கள் மத்தியில் முதன்மை தரவு வழியை உருவாக்கி இந்த சோதனை முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் இணையத்தின் வாயிலாக டேட்டா பரிமாற்ற இணைப்பின் தொலைவு 3,000 கிமீ ஆக உள்ளது.
இந்த உலகின் அதிவேக இணைய நெட்வொர்க்-ஐ சிங்குவா பல்கலைக்கழகம், சீனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஒரு வினாடிக்கு 1.2 டெராபைட் டேட்டா டிரான்ஸ்பர் என்றால் 150 HD திரைப்படத்தை ஒரு நொடிக்கு டிரான்ஸ்பர் செய்வது போன்றது என Huawei Technologies துணைத் தலைவர் வாங் லீ தெரிவித்தார்.சாதித்துக்காட்டியுள்ளது சீனா.