‘அயலான்’ பட புதிய அப்டேட்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்தப் படத்திலிருந்து ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக நாடுகளிலும், அதிக திரையரங்களிலும் ‘அயலான்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *