இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்தத் டி 20 தொடரில் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது. அவர், உட்பட உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே டி 20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பைதொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிய சூர்யகுமார் யாதவ் தனது விருப்பமான டி 20 தொடரில் அணியை வழிநடத்த உள்ளார். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய ருதுராஜ்,யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்குசிங், திலக்வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய அணி மேத்யூ வேட் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பைதொடரை வென்ற அணியில்இடம் பெற்றிருந்த டிராவிஸ் ஹெட்,கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸம்பா, மார்கஸ்ஸ்டோனிஸ் ஆகியோர் டி 20 தொடரிலும் இடம் பெற்றுள்ளனர். டேவிட்வார்னருக்கு பதிலாக ஆல்ரவுண்டர்ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் பிரதான வீரர்கள்யாரும் இடம் பெறவில்லை. எனினும் கேன் ரிச்சர்ட்சன், நேதன் எல்லிஸ், சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால்கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டுடன் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது இஷான் கிஷன்களமிறங்கக்கூடும். தற்போதைய அணியில் 7 பேர்இடது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோருடன் திலக் வர்மா,ரிங்கு சிங், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அக்சர் படேல், ஷிவம்துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடது கை பேட்ஸ்மேன்களே.
இந்த டி 20 தொடரானது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுக்கும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ்குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கும் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை சவால் கொடுக்க காத்திருக்கிறது.