வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.