சீரற்ற வானிலை காரணமாக, இன்று (23) முதல் மறு அறிவித்தல் வரை பதுளை வரை இயங்கும் அனைத்து ரயில்களும் நானுஓயா வரை மட்டுமே இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனமழையுடன் மலையக ரயில் பாதையில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.