இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த ரூமி ஆறு வயதாக இருக்கும்போது 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கான்டன் தேர்தலில் வெற்றி பெற்ற போது இலங்கை மக்கள் தம்மை கொண்டாடியதாகவும், தேசிய நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவானமை பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதோடு
பேண்தகு சுகாதார நலன் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தாம் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது