கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஐபிஎல் ஏலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக் மற்றும் ஐபிஎல் தொடர் இரண்டுக்கும் ஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க பணிகளை ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.26ஆம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அனைத்து அணிகளும் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அணிகளும் வீரர்களை டிரேட் செய்து மாற்ற முடியுமா என்று ஆலோசித்து முயன்று வருகின்றனர்.