அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்டின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய பிரபலங்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழ் திரைப்பட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோரை சந்தித்து அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, தோனி அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் உள்ளனர். புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “பெரிய ஃபிரேமுடன் வீட்டில் மாட்டுவதற்கான அழகான புகைப்படம். என்னுடைய அழகி நயன்தாராவுடன் அன்பான சாக்ஷி மேம்(mam) நம்முடைய அழகன் தோனி” என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.
அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ள நயன்தாரா, “மிகவும் அன்பான தோனி சார் மற்றும் சாக்ஷி மேம்(mam). தூய்மையான அன்புடையவர்கள். எப்போதும் ஆசிர்வாதமுடன் இருங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.