அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில், உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப்பின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர், பாதுகாப்பு பிரிவின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, டொனால்ட் டிரம்ப் கீழே குனிந்துள்ளார்.
தனது தோல் வழியாக துப்பாக்கி ரவை கிழித்தெறிந்தது என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பின் அதையடுத்து, அவரை பாதுகாப்பு பிரிவினர் சூழ்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.