ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால், அதில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2வில் நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஆர்ஜே பாலாஜி கூறிய நிலையில், முக்கியமாக மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் அம்மனாக நயன்தாரா நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது