கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. படப்பிடிப்பு வரும் ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பணிகள் இன்று தொடங்கியுள்ளன. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த், அவினாஷ், யுகி சேது, பாலாஜி சக்திவேல் என முந்தைய படத்தில் இருந்த அதே குழு இந்தப் பாகத்திலும் தொடர்கிறது.
இதில் என்ன மாற்றம் என்றால் முந்தைய பாகத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தற்போது உருவாக உள்ள இரண்டாம் பாகத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்குகிறது. கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ‘வா வாத்தியாரே’, ‘மெய்யழகன்’ ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்
கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார்
படத்தொகுப்பு – வேலு குட்டி
தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி
இணை தயாரிப்பு – A வெங்கடேஷ்
தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார்
மக்கள் தொடர்பு
சதீஷ்குமார் (S2 Media)