வேலை நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னரே ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
சில ரயில் கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் மற்றும் ரயில் நிலைய அதிபர்கள் வேலைக்கு திரும்ப வேண்டியுள்ளதாகவும், பல ரயில்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, நண்பகல் 12 மணிக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.