கெசல்கமு ஓயாவில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நோர்வூட் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் பலாங்கொடை, டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 மற்றும் 31வயது 47 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.