இருபதுக்கு T20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த தொடர்களில் முதலாவதாக இடம்பெறவுள்ள இருபதுக்கு T20 போட்டிகள் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 26, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓகஸ்ட் மாதம் 1, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.