இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்துக்கொண்டு, தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியாவை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி ரஷ்யா சென்றடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரஷ்ய ஜனாதிபதி நிளாடிமர் புட்டினை சந்தித்திருந்தார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22 ஆவது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், இராணுவம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், உக்ரைன் போர் குறித்தும் விவாதிக்கப்பட்டிருந்தது.
ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த, இந்திய பிரதமர் தொடர்ந்து, ஆஸ்திரியா நாட்டிற்கும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா வாழ். இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ரஷ்ய- இந்திய சுற்றுப்பணங்களை நிறைவுசெய்த இந்திய பிரதமர் இன்று தாய் நாட்டைச் சென்றுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.