இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி ரோகித் சர்மா ஜடேஜா ஆகியோர் தற்போது விடுமுறையில் இருக்கின்றனர்.
மேலும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியானது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் அதிகம் நடைபெற இருப்பதால் அதற்காக கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று இருவரும் கூறி இருக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போது விராட் கோலி லண்டனில் மனைவியுடன் இருக்கின்றார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஒரு சில ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடுகிறது. அதற்கான அணியை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய அணி உள்ளது.
இதனால் இலங்கைக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் சீனியர்கள் இடம்பெற வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கம்பீர் கடுப்பாகிவிட்டார். பிசிசிஐ சீனியர்களுக்கு வழங்கிய விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது டி20 தொடரில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட போவதில்லை என்பதால் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு கிடைக்கும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் கம்பீரின் பேச்சு எடுபடவில்லை என தெரிகிறது. இதனால் கேஎல் ராகுல் தலைமையில் அணியை தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு எடுத்திருக்கிறது.
இதன் மூலம் கம்பீர் என்ன செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இலங்கை அணி தற்போது பலம் குன்றி இருப்பதால் விராட் கோலி, ரோஹித் போன்ற சீனியர் வீரர்கள் தேவை இல்லை என்று கம்பீரிடம் பிசிசிஐ கூறி இருக்கிறது. இதில் நியாயம் இருப்பதாக கம்பீர் உணர்ந்தாலும் என்ன நடக்கப் போகிறது என்று இனி தான் தெரியவரும்.