தேசிய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட ஆண்கள் /பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த 3.7 .2024 தொடக்கம் – 7/7/2024 வரை கொழும்பு ரொறிங்ரன் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இப் போட்டியில் வடமாகாண குத்துச்சண்டை வீராங்கனைகளாக கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகளான கருப்பட்ட முறிப்பு K.இந்துகாதேவி(48-50kg), பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த S. யஷ்மிதா(57-60kg), இருவரும் தேசிய குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் 2ஆம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்,
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வட மாகாணத்திற்க்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தமது கிராமத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
இவ் முல்லைத்தீவு மாவட்ட குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.