இந்த ஆண்டு கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இணையவழி முறையின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் முறையின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணி (10.07.2024) முடிவடைய இருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் எக்காரணம் கொண்டும் விண்ணப்பம் பிற்போடப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.