யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் சிறு தொழில் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச செயலகம் கரைதுறைப்பற்று இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி (08) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணிவரை நடைபெற்றது.
இந்த விற்பனைக் கண்காட்சியில் உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், தோற்பொருள் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், அழகுக் கலை தொடர்பான சேவைகள், வியாபார ஆலோசனைகள் முதலான விடயங்கள் இடம்பெற்றன.
இந்த விற்பனைக் கண்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டினார்கள்.