– பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட 6 பேர் படுகாயம்
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் இன்று (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
”கிளப் வசந்த” எனப்படுபவர் இதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கையின் பிரபல பாடகி கே. சுஜீவா இதில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.