இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. Marc-André Franche அவர்கள் இன்றய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மாவட்டச் செயலாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள், மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர். திருமதி.வா.கிருபாசுதன் அபிவிருத்தி உத்தியோகத்தர். திரு.ரஜனிக்காந் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவித்தித் திட்டத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.